மார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்
Views - 278 Likes - 0 Liked
-
மார்த்தாண்டம் அருகே அரசு ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் மினி வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 2500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர் ராஜ் கொண்ட குழு வினர் நேற்று அதி காலை மார்த்தாண்டம் கொல்லஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு மினிவேன் அரசு ஸ்டிக்கர் ஒட்டி வந்துக்கொண்டிருந்தது. அந்த வேனை நிறுத்துமாறு சைகை காட்டினர் இருந்தும் வேன் நிக்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் சென்று மார்த்தாண்டம் அருகே
சினிமா பாணியில் விரட்டி விரட்டி எட்டணி பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வேனை சோதனை செய்து பார்த்த போது சுமார் 2500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. பிறகு கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வேனை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
News