பால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் மனு
Views - 332 Likes - 0 Liked
-
கண்டன்கோணம் பகுதியில் உள்ள பால் குளத்தில் கலங்கிய தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கண்டன்கோணம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கலங்கிய தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கண்டன் கோணம் பகுதியில் உள்ள பால் குளத்தில் பல்வேறு பகுதியில் உள்ள சாக்கடை நீர் வந்து தேங்கி குளம் பயனற்றதாக மாறி வருகிறது. தண்ணீரில் புழுக்களும் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நோய் பரவும் நிலை உருவாகி உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
News