" “If opportunity doesn't knock, build a door.”"

வடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியேற்றம்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Views - 331     Likes - 0     Liked


  • நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக இருந்தவர்கள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி பஸ் ஸ்டாண்டு முக்கியத்துவம் பெற்றது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் வெளி மாவட்டங்கள் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் வடசேரி பஸ் ஸ்டாண்டில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருந்து வருகிறது. பயணிகள் பஸ் ஏறுவதற்காக இந்த பஸ் ஸ்டாண்டில் வந்து வெயிட்டிங் இருக்கையில் பஸ் வரும் வரை இருக்கலாம் என்றால் அது சிரமமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் இரவு நேரங்களில் மிகவும் அவதிக்கு உட்பட்டு தான் நின்று ஏற வேண்டிய நிலை இருந்து வந்தது. திடீரென பார்த்தால் ஒரு பக்கத்தில் இருந்து பாத்திரங்களை எடுத்து அடிப்பதும், தகாத வார்த்தைகளால் சப்தம் போடுவதும், அங்கும் இங்குமாக சப்தம் போட்டு கொண்டு ஓடுவது என்று பயணிகளை அச்சுறுத்தும் நிலை தொடர்ந்து நடந்து வந்தது. பயணிகள் வெயிட்டிங் இருக்கையில் இருக்கலாம் என்றால் துர்நாற்றம் வீசும் வகையில் மூட்டை முடிச்சுகளுடன் பொட்டணமாக வைத்து கொண்டு அந்த இடமே அலங்கோலமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் ஓய்வெடுக்கும் இருக்கையில் இருக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். வடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் நிலைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் வடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனால் வடசேரி பஸ் ஸ்டாண்டின் உள்ளே இருந்தவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வந்து முறையிட்டனர்.

    News