கன்னியாகுமரி கடற்கரைக்கு சீல் போலீசார் துரித நடவடிக்கை
Views - 322 Likes - 0 Liked
-
புரெவி புயல் எதிரொலியாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு சீல் வைத்து அங்கிருந்த அண்டை மாவட்டத்துகாரர்களை சொந்த ஊர்களுக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரிக்கு 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்று காலை வந்தனர். திரிவேணிசங்கமம், கடற்கரைசாலை, காந்திமண்டபம், காமராஜர் மண்டபம் போன்ற இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் சிப்பி சங்கு பாசி, ஊசி வியாபாரம் செய்யும் அண்டை மாவட்டத்தில் உள்ளவர்களை அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்களைகடற்கரைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கன்னியாகுமரி டவுண் பஞ்., அலுவலகத்திற்கு வந்தனர். உடனே டவுண் பஞ்., செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் கணக்கெடுத்து கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பஸ்ஸில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
News