ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி- தொடரையும் வென்றது
Views - 288 Likes - 0 Liked
-
சிட்னி,இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. பந்து வீச்சை பொருத்தவரை நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து, 195-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி சிறப்பான தொடக்கம் பெற்றது. துவக்க வீரர் ஷிகர் தவான் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.News