மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
Views - 295 Likes - 0 Liked
-
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில் மார்த்தாண்டம் பகுதி வணிக நிறுவனங்களில் பச்சைக்கொடி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் நகர வர்த்தக சங்க தலைவர் தினகர் தலைமையில் ஜார்ஜ் முன்னிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சைக்கொடி கையில் ஏந்தி போராட்ட பதாகைகளை கையில் பிடித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி சேர்மன் பொன். ஆசைதம்பி, சங்க செயலாளர் ராஜ்பினோ, மாவட்ட இணை செயலாளர் ஆனந்த், துணைத்தலைவர்கள் ராஜகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
News