பீகாரில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறப்பு
Views - 308 Likes - 0 Liked
-
பாட்னா,கொரோனா தொற்று காரணமாக பீகார் மாநிலத்தில் கடந்த மார்ச் முதல் 9 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.இந்நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளதால், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களை இன்று (ஜன.4) முதல் திறக்கும் முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. பள்ளிகளைப் பொறுத்தவரை முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கவும், 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்கள் செயல்பாடு தொடர்பாக கண்டிப்பான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குப் பின் நடைபெறும் ஆய்வுக்குப் பின், 8 மற்றும் அதற்குக் கீழ் உள்ள வகுப்புகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் பீகார் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய்குமார் தெரிவித்தார்.News