24 மணி நேரத்தில் மத்திய படையினர் 156 பேருக்கு கொரோனா
Views - 299 Likes - 0 Liked
-
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மத்திய ஆயுதப்படை போலீசார் (சி.ஏ.பி.எப்.) 156 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் படையில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 577 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 13-ந் தேதியன்று 421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.கொரோனா தொற்றுக்கு ஆளான 577 மத்திய ஆயுதப்படை போலீசாரில், 462 பேர் பி.எஸ்.எப். என்னும் எல்லை பாதுகாப்பு படையினர் ஆவார்கள். மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் (சி.எஸ்.ஐ.எப்.) 48 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏற்கனவே 260 பேர் சிகிச்சை பெறும் நிலையில், மேலும் 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 118 இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் சிகிச்சை பெறும் வேளையில், மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதே போன்ற பிற மத்திய படையினரும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.News