மாநில அரசுகளுக்கு போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் வினியோகம் - ராஜ்நாத்சிங் உத்தரவு
Views - 260 Likes - 0 Liked
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் நிலையில், ஆஸ்பத்திரிகள் திண்டாடி வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்தநிலையில், முப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ரஜத் தத்தா, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய ராஜ்நாத்சிங், “மூன்று படையினரும் நாடு முழுவதும் அரசு நிர்வாகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். உதாரணமாக, மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதலாக தேவைப்படும் படுக்கைகள் உள்ளிட்ட பொருட்களை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், ஆயுத தொழிற்சாலை வாரியம் ஆகியவை இப்பணியில் ஈடுபட வேண்டும். அதுபோல், கொரோனா பரவல் காலத்தில், தேவையான மருத்துவ சாதனங்களை வாங்க முப்படையினருக்கு நிதி அதிகாரம் அளிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.News