விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
Views - 267 Likes - 0 Liked
-
பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டப்படி, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணைத்தொகையை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கிறார். 9 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தப்படும்.காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சில பயனாளிகளுடன் பிரதமர் உரையாடுகிறார். மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமரும் கலந்து கொள்கிறார்.News