சென்னைக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை
Views - 262 Likes - 0 Liked
-
கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இதில் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று வரை 115 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்திருப்பதாகவும், இதில் 444 டேங்கர்களில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே கூறியுள்ளது. இதுவரை 7,115 டன் மருத்துவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியிருப்பதாக ரெயில்வே குறிப்பிட்டு உள்ளது.அந்த வகையில் மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை வந்து சேர்ந்த முதல் ஆக்சிஜன் ரெயிலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வந்து சேர்ந்துள்ளதாகவும், இது மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் என்றும் கூறினார்.News