மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு
Views - 291 Likes - 0 Liked
-
சமூக வலைத்தள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு 3 மாத அவகாசமும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதாக பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்பு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாகவும் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் விதிகளை முறியடிக்கும் வகையில் புதிய விதிகள் இருப்பதாக தனது மனுவில் வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.’News