மேக் இன் இந்தியா: ஐ.சி.ஜி. சஜாக் ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
Views - 252 Likes - 0 Liked
-
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் பொருட்களை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவற்றில் நாட்டின் பாதுகாப்பு படைக்கு தேவையான பொருட்களின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், புதிய கண்டுபிடிப்புகள், உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுதல், தொழில் வளம் உள்ளிட்டவை மேம்படும்.இதன் ஒரு பகுதியாக கடல்வழி பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கப்பல்களை வடிவமைக்கும் பணியும் உள்நாட்டிலேயே நடந்து வருகிறது.இதன்படி, கோவாவில் உள்ள ஜி.எஸ்.எல். நிறுவனம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட இந்திய கடலோர காவல் படையின் சஜாக் என்ற கப்பல் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட உள்ளது.இந்த கப்பல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு முறைப்படி அதனை தொடங்கி வைக்கிறார்.News