ஆசிய குத்துச்சண்டை அரைஇறுதிப்போட்டி முடிவு மாற்றம் - சாக்ஷிக்கு வெண்கலப்பதக்கம்
Views - 268 Likes - 0 Liked
-
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாக்ஷி 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டினா ஜோலாமானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக முதலில் கூறப்பட்டதுஇந்த ஆட்டத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கஜகஸ்தான் அணி நிர்வாகம் சார்பில் உடனடியாக அப்பீல் செய்யப்பட்டது. அதில் 3-வது ரவுண்டு பந்தயத்தை மறுஆய்வு செய்யுமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. போட்டியின் வீடியோ பதிவை ஆய்வு செய்த நடுவர்கள் சாக்ஷிக்கு எதிரான அரைஇறுதியில் டினா ஜோலாமான் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ‘போட்டியின் 3-வது ரவுண்டு கஜகஸ்தான் வீராங்கனைக்கு சாதகமாக இருப்பதாக கூறியது சரியானது தான் என்று தெரிய வந்ததால் நடுவர் போட்டியின் முந்தைய முடிவை மாற்றினார்’ என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த சாக்ஷி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.News