" “If opportunity doesn't knock, build a door.”"

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்: பல மாநிலங்களில் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை

Views - 274     Likes - 0     Liked


  • சர்வதேச சந்தையில் நிலவும்  கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.  
     
    கொரோனா தொற்று காரணமாக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால், தனிநபர் வாகன போக்குவரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால், எரிபொருள் நுகர்வும் கணிசமாக குறைந்திருக்கும் என்று தெரிகிறது. 
     
    இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக  கடந்த மே 4 ஆம்தேதிக்கு பிறகு 18-வது முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 24 காசுகளும் டீசல் 26 காசுகள் உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 94.76 -ஆக உள்ளது. டீசல் ரூ. 85.66- ஆக உள்ளது. 
     
    மும்பையில் பெட்ரோல், மற்றும் டீசல் விலை முறையே ரூ.100.98 , 92.99- ஆக விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 96.92 ஆகவும் டீசல் ரூ.90.38 க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ. 94.76-ஆக உள்ளது. டீசல் விலை 88.51- ஆக இருக்கிறது. 
     
    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், போபால் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100- ஐ தாண்டியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.80- க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.63- க்கு விற்பனையாகிறது. 
     
    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.36-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.93-ம் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11-ம் டீசல் விலை 12-ம் உயர்ந்துள்ளது. 
     
     

     
     
     
     
    News