சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் தனது டென்னிஸ் பேட்டை சிறுவனிடம் வழங்கிய ஜோகோவிச்
Views - 296 Likes - 0 Liked
-
பாரீஸ்,‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் 5-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாசும் மோதினர்.
இதில் தொடக்கத்தில் இருந்தே யாருக்கு வெற்றி என்பதில் பலத்த போட்டி ஏற்பட்டது. இதில், முதல் இரண்டு செட்டுகளை சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதனால் அவர் வெற்றி பெறும் சூழல் காணப்பட்டது.எனினும், அடுத்த 3 செட்டுகளையும் ஜோகோவிச் கைப்பற்றி வெற்றியை தன்வசப்படுத்தினார். இதனால், 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை நோவக் ஜோகோவிச் தட்டிச்சென்றார். இருவருக்கும் இடையேயான இறுதி போட்டி 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்தது.இந்நிலையில், போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் தனது டென்னிஸ் பேட்டை மைதானத்தில் நின்றுகொண்டிருந்த தனது ரசிகனான ஒரு சிறுவனிடம் ஜோகோவிச் வழங்கினார்.ஜோகோவிச் அவர் பயன்படுத்திய டென்னிஸ் பேட்டை தன்னிடம் வழங்கியதால் அந்த சிறுவன் மிகுந்த ஆனந்தம் அடைந்தான்.தனது ரசிகனான அந்த சிறுவனிடம் டென்னிஸ் பேட்டை அன்பளிப்பாக கொடுத்தது தொடர்பாக பேசிய ஜோகோவிச், போட்டி முழுவதும் அந்த சிறுவனின் பேச்சு எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த சிறுவன் என்னை ஊக்கப்படுத்தினான். உண்மையை சொல்லப்போனால் அவன் எனக்கு வியூகங்களை கூறினான். முழுமையாக கூறினால் அந்த சிறுவன் எனக்கு பயிற்சி அளித்தான்’ என்றார்.News