‘தண்ணீர் குடியுங்கள்’ என கூறி ரொனால்டோ செய்த ஒற்றை 'மூவ்’ - குளிர்பான நிறுவன மதிப்பு சரிவு
Views - 284 Likes - 0 Liked
-
யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்த உடன் தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ தன் முன்னாள் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக்க கோலா குளிர்பான பாட்டில்களை பார்த்தார்.உடனடியாக அந்த இரண்டு கோக்க கோலா பாட்டில்களையும் எடுத்த ரோனால்டோ அதை மேஜையை விட்டு அகற்றி கீழே வைத்தார். மேலும், தனக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ’தண்ணீர் குடியுங்கள்’ என்று கூறினார்.இந்த நிகழ்வு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கோக்க கோலா குளிர்பானத்தை அகற்றிவிட்டு ‘தண்ணீர் குடியுங்கள்’ என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்திய சில நிமிடங்களில் கோக்க கோலாவின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது.ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால் கோக்க கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.News