டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் சிங் தகுதி
Views - 276 Likes - 0 Liked
-
பாட்டியாலா,இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப்பை சேர்ந்த 26 வயது தஜிந்தர் சிங் தூர் 21.49 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டில் தஜிந்தர் சிங் தூர் 20.92 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. குண்டு எறிதலில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 21.10 மீட்டர் ஆகும். தஜிந்தர் சிங் தூர் 2018-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு மற்றும் 2019-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.News