எஸ்.பி.ஐ ஏடிஎம்-ல் ரூ.16 லட்சம் கொள்ளை: கொள்ளையர்கள் கைவரிசை; போலீசார் வலைவீச்சு
Views - 268 Likes - 0 Liked
-
சென்னை,சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் டெபாசிட் செய்யும் மெஷினிலிருந்து நூதனமான முறையில் வடமாநில கொள்ளையர்கள் சிலர் 40 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தனிப்படை அமைத்து வடமாநிலங்களில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்இந்த நிலையில் சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் அதேபோன்ற நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையில் பெரியமேடு எஸ்பிஐ கிளையின் மேலாளர் புகார் அளித்துள்ளார்.இந்த புகார் குறித்து எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 190 முறை ஒரே அக்கவுண்டில் நூதன முறையில் ரூபாய் 16 லட்ச ரூபாய் திருட்டு நடைபெற்றது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.News