ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருள்; கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை - உணவு பொருட்கள் வழங்கல் துறை
Views - 242 Likes - 0 Liked
-
சென்னை,சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.இதன்படி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.இந்தநிலையில் 2-வது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் மளிகை பொருட்கள், கொரோனா உதவித்தொகை 2-ம் தவணை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில், ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 பெறுவதற்கும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்று உணவு பொருட்கள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.News