விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆஷ்லி பார்ட்டி போராடி வெற்றி
Views - 271 Likes - 0 Liked
-
லண்டன்,‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்றும் தொடர்ந்து முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் கிரிக்ஸ்பூரை (நெதர்லாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் அர்ஜென்டினாவின் ஸ்வாட்ஸ்மேன் 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட்டில் பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) விரட்டினார்.பெண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-1, 6-7 (1-7), 6-1 என்ற செட் கணக்கில் போராடி சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் மிஹேலா புஜர்நெஸ்குவை (ருமேனியா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 37 நிமிடங்கள் நீடித்தது. 41 வயதான வீனஸ் வில்லியம்ஸ் விம்பிள்டனில் பதிவு செய்த 90-வது வெற்றி இதுவாகும். முதல் நாள் போல் நேற்றும் மழையால் நிறைய ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன.News