பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: திரிணாமூல் காங். அறிவிப்பு
Views - 253 Likes - 0 Liked
-
கொல்கத்தா,பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அந்தவகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10,11 ஆகிய தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட போவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.News