நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Views - 258 Likes - 0 Liked
-
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளாருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களிடம் ஆட்சி பொறுப்பு இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வழி தெரியும் என்றனர். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதனை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வுக்கு எதிராக கடைசி வரை சட்ட போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழி வகை கிடைக்கும் வகையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி, 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை உருவாக்கி கொடுத்தார்.ஆனால் தற்போது தி.மு.க. அரசு முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழுவோ நீட் தேர்வை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்று கூறி உள்ளது. இதை நாங்களும் வரவேற்கிறோம். தற்போது இந்தாண்டிற்கான நீட் தேர்வு தேதி வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதை வருகிற நிதி நிலையில் அறிவிக்க வேண்டும். மேகதாது அணை பிரச்சினையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட எந்த தியாகத்தையும் அரசு மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.News