இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது
Views - 266 Likes - 0 Liked
-
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இரண்டாம் தர இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கொரோனா பாதிப்பு காரணமாக இயான் மோர்கன் தலைமையிலான அணியினர் தனிமைப்படுத்தப்பட்டதால் 2-ம் தர அணி களம் இறங்கியது.
இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. தனிமைப்படுத்துதல் முடிந்து விட்டதால் இயான் மோர்கன் தலைமையிலான வலுவான இங்கிலாந்து அணி களம் காணுகிறது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது பாகிஸ்தானுக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.News