நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க.,காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா
Views - 250 Likes - 0 Liked
-
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்ற்ன. கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு எதிர்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.தர்ணாவில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.News