பெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை
Views - 251 Likes - 0 Liked
-
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்களை ஒட்டுகேட்க இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக வெளியான செய்திகள் மத்திய அரசு வட்டாரங்களை உலுக்கி வருகிறது.இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கேட்டு எதிர்க்கட்சிகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காததால் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கி வருகிறது. இந்த நிலையில் பெகாசஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ஆலோசனை நடத்துகிறார்.டெல்லி அரசியல்சாசன கிளப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பெகாசஸ் பிரச்சினையில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய கொள்கையை வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. ராகுல் காந்தி நடத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி நடத்திவரும் ஆலோசனை கூட்டங்களை இந்த கட்சியினர் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.News