அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
Views - 288 Likes - 0 Liked
-
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.News