டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
Views - 285 Likes - 0 Liked
-
டோக்கியோடோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 26 மைல் தூரத்திற்கான மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோர்ஹட் அம்டவுனி என்பவரும் 1 ஓடிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில் வீரர்களுக்கு குடிப்பதற்காக சாலையோரத்தில் குடிநீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில வீரர்கள் குடிப்பதற்கு பாட்டில்களை எடுத்த போது, பிரான்ஸ் வீரர் மட்டும் அடிக்கு வைத்திருந்த பாட்டில்களைத் மற்றவர்கள் எடுக்க விடாமல் தட்டி விட்டார்.இதனால் பின்னால் வந்த மற்ற வீரர்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடினர். மோர்ஹட்டின் இந்தச் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.ஆஸ்திரேலிய நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் இந்த சம்பவத்தை கவனித்து அதை சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி உள்ளார்.வெற்றி பெற்ற கென்யா வீரர் எலியூட் கிப்சோஜே தங்கம் வென்றார்.நெதர்லாந்தின் அப்டி நாகீய் வெள்ளியும், பெல்ஜியத்தின் பஷீர் அப்டி வெண்கலமும் வென்றனர். அம்தவுனி 14 வது இடத்தைப் பிடித்தார்.News