இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது இங்கிலாந்து
Views - 271 Likes - 0 Liked
-
லண்டன்,இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதால் கடந்த மே மாதத்தில் இங்கிலாந்து இந்தியாவுக்கு பயணம் கட்டுப்பாடு விதித்தது.இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்து வருகிறது.இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது. இதன்படிஇந்தியாவில் இருந்து திரும்பும் தடுப்பூசி முழுமையாக போட்ட இங்கிலாந்து குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.News