டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - பிசிசிஐ
Views - 258 Likes - 0 Liked
-
புதுடெல்லி,டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான அணியில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.டி20 உலககோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.டோனி இருப்பார் என பிசிசிஐ துணை தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யாகுமார், இஷான் கிஷனுக்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.புவ்னேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர்களான ரவீந்தர ஜடேஹா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன.News