திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல்
Views - 293 Likes - 0 Liked
-
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9-ம் தேதி அறிவித்துள்ளது.இந்நிலையில், இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.இரண்டு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.News