" “If opportunity doesn't knock, build a door.”"

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று பலப்பரீட்சை

Views - 243     Likes - 0     Liked


  • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் 32-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.



    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் (ஒரு சதம் உள்பட 277 ரன்கள்) நல்ல பார்மில் இருக்கிறார். ஷிவம் துபே (145 ரன்கள்), டேவிட் மில்லர் (102 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் ஓரளவு கைகொடுத்து வருகிறார்கள்.

    பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ் (14 விக்கெட்) கலக்கி வருகிறார். முஸ்தாபிஜூர் ரகுமான் (8 விக்கெட்), சேத்தன் சகாரியா (7 விக்கெட்) ஆகியோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், ஆன்ட்ரூ டை ஆகியோர் விலகியதை அடுத்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி (தென்ஆப்பிரிக்கா), அதிரடி ஆட்டக்காரர் இவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் அந்த அணியில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    லோகேஷ் ராகுல்

    பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (331 ரன்கள்), மயங்க் அகர்வால் (260 ரன்கள்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (178 ரன்கள்), ஷாருக்கான், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன் ஆகியோரும் அந்த அணியின் பேட்டிங்கில் வலு சேர்க்கும் வல்லமை படைத்தவர்கள். பந்து வீச்சில் முகமது ஷமி ( 8 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (7 விக்கெட்), முருகன் அஸ்வின், ரவிபிஷ்னோய் ஆகியோர் பயனுள்ள வகையில் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். டேவிட் மலான், ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் விலகியதை தொடர்ந்து பேட்ஸ்மேன் மார்க்ராம் (தென்ஆப்பிரிக்கா), சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (இங்கிலாந்து), நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் புதிய வரவாக அணியினருடன் இணைந்துள்ளனர்.

    News