வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு - டிஎன்பிஎஸ்சி
Views - 256 Likes - 0 Liked
-
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் நடப்பாண்டு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை.2021 தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணையத்தில் சென்று பார்க்கலாம்.தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29ஆம் முதல் 7-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.News