ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
Views - 251 Likes - 0 Liked
-
டோனி-கோலி அணிகள்ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சார்ஜாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 35-வது லீக்ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கும் சென்னை அணி 2-வது கட்ட சீசனின் தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்சை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை அணி தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் (88 ரன்) நேர்த்தியான பேட்டிங்கால் சரிவில் இருந்து மீண்டு 150 ரன்களை கடந்தது. இந்த வெற்றி சென்னை அணியின் நம்பிக்கைக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி அவசரகதியில் விளையாடி ‘டக்-அவுட்’ ஆனார்கள். இன்றைய ஆட்டத்தில் அவர்கள் பொறுப்புடன் ஆடுவார்கள் என்று நம்பலாம். இடது முழங்கையில் பந்து தாக்கி காயமடைந்த அம்பத்தி ராயுடுவுக்கு ‘எக்ஸ்ரே’ பரிசோதனையில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் வீக்கம் உள்ளது. அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் ராபின் உத்தப்பா இடம் பெறலாம். இதே போல் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனை அணியில் சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.பரிகாரம் தேட முனைப்புபெங்களூரு அணி 8 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெறும் 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் ஜொலிக்கவில்லை. இந்த மோசமான தோல்விக்கு பரிகாரம் தேடும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறார்கள். இதே போல் பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசன், முகமது சிராஜ், ஹசரங்கா தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் உள்ளனர்.மொத்தத்தில் வலுவான அணிகள் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த முதற்கட்ட லீக் ஆட்டத்தில் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.‘ரன்மழை’ மைதானம்கடந்த ஆண்டு அமீரகத்தில் ஐ.பி.எல். நடந்த போது சார்ஜா மைதானத்தில் ரன்மழை பொழியப்பட்டது. பவுண்டரி தூரம் குறைவு, பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளமான இங்கு கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அதே போல் இந்த முறையும் இங்கு ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-சென்னை: பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு அல்லது உத்தப்பா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், சச்சின் பேபி, கைல் ஜாமிசன், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.News