ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
Views - 246 Likes - 0 Liked
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும், டூ ப்ளஸ்ஸி 43 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடிய கெய்க்வாட் 28 பந்துகளில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் விளாசி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.தொடர்ந்து சிறப்பாக ஆடிய சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா அதிரடியாக ஆடி சென்னையை அணியை வெற்றி பெற செய்தார். சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.News