ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 4 தங்கப்பதக்கம்
Views - 277 Likes - 0 Liked
-
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடந்து வருகிறது. இதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா 3-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு, பெண்கள் அணி, ஆண்கள் அணி மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் அணி ஆகிய பிரிவில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. ஏற்கனவே 2 தங்கம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மானு பாகெர் அந்த எண்ணிக்கையை 3-ஆக உயர்த்தினார். அதாவது மானு பாகெர், ரிதம் சாங்வான், ஷிகா நார்வால் ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் 16-12 என்ற புள்ளி கணக்கில் பெலாரசை தோற்கடித்தது.3-வது நாள் முடிவில் இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என்று 14 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 4 தங்கம் உள்பட 10 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.News