கர்நாடகாவில் கனமழை; வெள்ளநீரில் மிதக்கும் பெங்களூரு விமான நிலையம்
Views - 290 Likes - 0 Liked
-
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கோனப்பன அக்ரஹார பகுதியில் வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவர் தப்பிவிட்டார்.இந்நிலையில், கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் சென்ற நிகழ்வையும் காண முடிந்தது.பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.News