சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறது?
Views - 244 Likes - 0 Liked
-
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார்.இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அக்டோபா் 6-ஆம் தேதி கடைசியாக ரூ.15 அதி கரிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை அதன் விலை ரூ.90 அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைவாக விற்பதால் ஏற்படும் இழப்பு, ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாயை எட்டியுள்ளதாகவும் இதனால், அதன் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விலை எவ்வளவு உயரும் என்பது அரசின் அனுமதியைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.News