தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கை
Views - 239 Likes - 0 Liked
-
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று முதல் நவம்பர் 1 வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதேபோன்று, காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசும். காற்றின் வேகமானது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற்கரையோரம், மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதியில் நிலவும். மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.News