வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு
Views - 238 Likes - 0 Liked
-
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதன் காரணமாக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 268 உயர்ந்து ரூபாய் 2,133 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கான விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.915.50க்கு விற்பனையாகுகிறது.கடந்த மாதம் விற்பனையான ரூ.915.50 என்ற விலையிலேயே இந்த மாதமும் விற்பனை ஆகும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இருப்பினும் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் உணவகங்களில் நம்பி இருக்கும் ஓட்டல் பிரியர்கள் கவலை அடைந்துள்ளானர்.News