முழுக் கொள்ளளவை எட்டியது வைகை அணை...
Views - 242 Likes - 0 Liked
-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இந்தநிலையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 3,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணைக்கு வரும் 3,000 கனஅடி நீர் 7 மதகுகள் வழியாக வெளியேற்றம் செய்யப்படுகிறது. மேலும் பாசன கால்வாய் வழியாக வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.அணை நிரம்பியதையடுத்து தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களுக்கு 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பி உள்ளது. வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 31-வது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.News