கோலி தனது ஆலோசனைகளை கேப்டனுக்கு வழங்க வேண்டும்- சேவாக்
Views - 261 Likes - 0 Liked
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‘சச்சின் தெண்டுல்கர் தனது நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறார். அவர் எந்த கேப்டனின் தலைமையில் விளையாடினாலும் போட்டியின் போது கேப்டனிடம் தனது ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வார். அதனை செயல்படுத்துவதும், செயல்படுத்தாததும் கேப்டனின் முடிவாகும்.இதேபோல் கோலி 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், புதிய கேப்டனுக்கு தனது ஆலோசனைகளை வழங்குவதுடன், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்’ என்று சேவாக் கூறியுள்ளார்.News