வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்: மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
Views - 246 Likes - 0 Liked
-
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறின. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பினார். எனவே இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.
காணொலிக் காட்சி மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
அறிவுரைகள்
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகள் வழங்குவார்.News