பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை:மிதாலிராஜ் 3-வது இடத்தில் நீடிப்பு
Views - 245 Likes - 0 Liked
-
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டதுஅதன்படி ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.தென்ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கிறார்கள்.News