புத்தாண்டு - கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு உத்தரவு
Views - 232 Likes - 0 Liked
-
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் இன்னும் விலகவில்லை. இந்தநிலையில் வருகிற 15-ந்தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது.இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,* டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.* சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.* ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து : வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்.* அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும்.News