" “If opportunity doesn't knock, build a door.”"

குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தகவல்

Views - 224     Likes - 0     Liked


  • நாகர்கோவில்,
    புத்தாண்டையொட்டி, குமரியில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
    சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம்
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, சங்குத்துறை பீச் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
    கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னியாகுமரி கடற்கரை மற்றும் திற்பரப்பு அருவியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
    பாதுகாப்பு பணியில்    1,100 போலீசார்
    இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வருகிற 31-ந்தேதி மற்றும் (2022)ஜனவரி 1-ந்தேதி ஆகிய தேதிகளில் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அரசின் தடை உத்தரவை தொடர்ந்து, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதை தடுக்கவும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை மேற்கொண்டார். 
    அப்போது அவர் கூறுகையில், அன்றைய தினங்களில் கடற்கரை பகுதிகளில் போலீசார் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
    News