ஆசிய வலுதூக்கும் போட்டி: பதக்கம் வென்ற தி.மு.க எம்.எல்.ஏ... காமன்வெல்த் போட்டிக்கு தகுதி
Views - 225 Likes - 0 Liked
-
துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராஜா. இவர் சமீபத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றார். மேலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வானார்.இதனையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. ராஜாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த நிலையில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில், இந்திய அணி சார்பாக 140 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் தற்போது வெண்கலப்பதக்கம் வென்று வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.News