பீகார் கல்லூரியில் 87 டாக்டர்களுக்கு கொரோனா
Views - 263 Likes - 0 Liked
-
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளந்தா மருத்துவ கல்லூரியில் 87 டாக்டர்களுக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியான 87 பேருக்கும் குறைவான அறிகுறிகளே இருந்ததாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்."பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 87 டாக்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு சிலருக்கு அறிகுறியற்றவர்கள் மற்றும் லேசான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாட்னா டிஎம் சந்திரசேகர் சிங் தெரிவித்தார்.News