ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி
Views - 208 Likes - 0 Liked
-
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.இதில் நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் ராஜீவ் ராம் கூட்டணி 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்டில் எலென் பெரேஸ் (ஆஸ்திரேலியா)- மேத்வி மிடில்கூப் (நெதர்லாந்து) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து விடைபெற உள்ள சானியா மிர்சா இந்த தொடரில் தற்போது களத்தில் தாக்குப்பிடித்து நிற்கும் ஒரே இ்ந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.News