நகர்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு
Views - 240 Likes - 0 Liked
-
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் 28-ந் தேதியன்றே (நாளை) தொடங்குகிறது. வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 37 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வியாபாரிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்தால் உரிய ஆவணம் சமர்பித்த பிறகு திருப்பி தரப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.News